கணினி

மற்றொரு இந்திய நகரில் ஜியோ 5ஜி - அசத்தல் அறிவிப்பு!

Update: 2022-11-24 05:30 GMT
  • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
  • நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனங்கள் தினந்தோரும் அறிவித்து வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பூனேவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறது. இந்த பகுதியில் 5ஜி சேவை வழங்கிய முதல் நிறுவனம் ஜியோ தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்டாண்ட்அலோன் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் பீட்டா டெஸ்டிங் துவங்கப்படுகிறது என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

முன்னதாக டெல்லி-NCR பகுதிகளான- டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன. இவை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரனாசி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடந்த மாதம் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன.

பூனே அதிக மாணவர்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதோடு முன்னணி தகவல் தொழில்நுட்ப பகுதியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியின் பெரும்பாலான பகுதிகள் பூனே சுற்றுவட்டார பகுதிகளிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில், ஜியோ 5ஜி வெளியீடு இந்த பகுதிவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சேவைகள் வழங்கப்பட்டதை அடுத்து பூனேவில் வசிக்கும் ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு இன்வைட் செய்யப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 1Gbps+ வேகத்தில் மொபைல் டேட்டா பயன்படுத்த முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. 

Tags:    

Similar News