கணினி

ஐடெல் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் - விலை இவ்வளவு கம்மியா?

Published On 2022-06-30 08:56 GMT   |   Update On 2022-06-30 08:56 GMT
  • ஐடெல் ஸ்மார்ட்வாட்ச்சில் 1.7-இன்ச் அளவுள்ள ஐபிஎஸ் எல்சிடி திரை இடம்பெற்றுள்ளது
  • இந்த ஸ்மார்ட்வாட்ச்சிற்கு 1 வருட தயாரிப்பு வாரண்டியும் வழங்கப்படுகிறது.

ஐடெல் நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் ஸ்மார்ட்வாட்ச் 1 ES என பெயரிடப்பட்டுள்ள இது ரூ.1,999 என்கிற மலிவு விலையில் கிடைக்கிறது. இது விரைவில் நாடு முழுவதும் உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது 1 வருட தயாரிப்பு வாரண்டியும் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் சதுர டயலைக் கொண்டுள்ளது. 1.7-இன்ச் அளவுள்ள ஐபிஎஸ் எல்சிடி திரை இதில் இடம்பெற்றுள்ளது சந்தையில் உள்ள பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்களைப் போலவே, இதுவும் ஒரு ஃபிட்னஸ் டிராக்கராக விளங்குகிறது.


எனவே, இது நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கிப்பிங், பூப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் யோகா போன்ற பல ஸ்போர்ட்ஸ் மோட்களை வழங்குகிறது. இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் அளவை கண்காணிப்பதற்கான வசதியும் இதில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்டிற்கான IP68-சான்றிதழை பெற்றுள்ளது. இதில் 220mAh பேட்டரி உள்ளது. இது முழு சார்ஜில் 15 நாட்கள் வரை நீடிக்குமாம். இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிற்கும் இணக்கமானது.

Tags:    

Similar News