கணினி

அசத்தலான இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹானர்

Published On 2022-08-30 05:06 GMT   |   Update On 2022-08-30 05:06 GMT
  • ஹானர் பிராண்டின் புது இயர்பட்ஸ் மாடல் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
  • இந்த இயர்பட்ஸ் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஹூவாய் நிறுவனத்தில் இருந்து பிரிந்தது முதல் இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு நிலையற்று காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றும் நோக்கில் ஹானர் பிராண்டு புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது இயர்பட்ஸ் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X என அழைக்கப்பட இருக்கிறது. வெளியீடு மட்டுமின்றி இந்த இயர்பட்ஸ் அம்சங்கள் பற்றிய விவரங்களும் டீசரில் இடம்பெற்று உள்ளது.

அந்த வகையில் புது ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடலில், 12 எம்எம் டிரைவர்கள், அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பிளேபேக் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்திய சந்தை தவிர ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடல் சர்வதேச சந்தையில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இது ஹானர் பிராண்டின் எண்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆகும்.


இதில் 12 எம்எம் பயோ-டயபிராம் டைனமிக் டிரைவர்கள், குறைந்த எடை செம்பு முலாம் பூசப்பட்ட அலுமினியம் அர்மேச்சர் கொண்டிருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, ஏஏசி மற்றும் எஸ்பிசி கோடெக் மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் 13 டிகிரி வளைந்த டிசைன் மற்றும் நேச்சுரல் பிட் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட் ஒன்றின் இடை 4.3 கிராம் ஆகும்.

இந்த இயர்போனில் டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இத்துடன் டூயல்-மைக் நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதி, அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பேட்டரி லைப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடலில் உள்ள கேமிங் மோட் 125 மில்லி செகண்ட் வரையிலான லோ லேடன்சி வழங்குகிறது. இதன் இந்திய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News