கணினி

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை கட்டி மரியாதை செலுத்திய பொறியாளர்

Update: 2022-06-20 06:12 GMT
  • சுமார் 27 ஆண்டுகளாக கணினி உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் ஜூன் 15-ந் தேதி விடைபெற்றது.
  • தென் கொரியாவை சேர்ந்த கியோங் ஜாங் என்கிற பொறியாளர், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை ஒன்றை கட்டி உள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் கடந்த ஜூன் 15-ந் தேதி உடன் விடைபெறுகிறது. கடந்த 1995-ம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. உலகளவில் மக்கள் பரவலாக கணினிகளை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலம் தான் பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இணைய வழியில் தேடி தெரிந்துகொண்டனர்.

சுமார் 27 ஆண்டுகளாக கணினி உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் ஜூன் 15-ந் தேதி விடைபெற்ற நிலையில், தற்போது தென் கொரியாவை சேர்ந்த கியோங் ஜாங் என்கிற பொறியாளர், அதற்கு கல்லறை ஒன்றை கட்டி உள்ளார். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் லோகோ உடன் கூடிய அந்த கல்லறையை கட்ட அவர் 330 டாலர் செலவழித்துள்ளாராம்.


அந்த கல்லறையில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அறிமுக தேதியும், அது விடைபெற்ற தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அதில் இடம்பெற்றுள்ள 'மற்ற சாஃப்ட்வேர்களை டவுண்லோடு செய்ய சிறந்த கருவியாக அவன் இருந்தான்' என்கிற வாசகமும் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கல்லறையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News