கணினி
null

சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் கொண்ட பிக்சல் டேப்லட் அறிமுகம்

Published On 2023-05-11 02:01 GMT   |   Update On 2023-05-11 05:08 GMT
  • ரிடிசைன் செய்யப்பட்ட கூகுள் ஹோம் ஆப் மற்றும் புதிய ஹப் மோட் கொண்டு ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
  • பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் கொண்ட முதல் டேப்லட் இது என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் முதல் டேப்லட் சாதனம் பிக்சல் டேப்லட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர் கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்டு இருந்தது. புதிய பிக்சல் டேப்லட் மாடலில் 10.95 இன்ச் WQXGA ஸ்கிரீன், சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லட்-இல் குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் நானோ செராமிக் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

பிக்சல் டேப்லட்-ஐ அதில் வைத்ததும் அது ஹேண்ட்-ஃபிரீ அசிஸ்டண்ட் அல்லது போட்டோ ஃபிரேம் போன்று செயல்படும். மேலும் ரிடிசைன் செய்யப்பட்ட கூகுள் ஹோம் ஆப் மற்றும் புதிய ஹப் மோட் கொண்டு ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். இந்த டாக்-இல் காந்தங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டேப்லட்-ஐ எளிதில் வைக்கவும், எடுத்துக் கொள்ளவும் முடியும்.

 

புதிய பிக்சல் டேப்லட் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. கூகுள் டென்சார் G2 பிராசஸர், 8MP செல்ஃபி மற்றும் பிரைமரி கேமரா, பவர் பட்டனில் கைரேகை சென்சார், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் கொண்ட முதல் டேப்லட் இது என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

கூகுள் பிக்சல் டேப்லட் அம்சங்கள்:

10.95 இன்ச் 2560x1600 WQXGA டிஸ்ப்ளே

கூகுள் டென்சார் G2 பிராசஸர்

டைட்டன் M2 செக்யுரிட்டி சிப்

8ஜிபி ரேம்

128 ஜிபி, 256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 13

8MP பிரைமரி கேமரா

8MP செல்ஃபி கேமரா

குவாட் ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்

கைரேகை சென்சார்

வைபை 6, ப்ளூடுத் 5.2

யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1

மேக்னடிக் டாக்

27 வாட் ஹவர் பேட்டரி

15 வாட் சார்ஜிங் வசதி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் ஹசெல், போர்சிலைன் மற்றும் ரோஸ் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 880 என்று துவங்குகிறது. இதன் 256 ஜிபி மெமரி மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 075 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பிக்சல் டேப்லட் மாடலுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. விற்பனை ஜூன் 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

Tags:    

Similar News