கணினி

ஆரம்பமே அதிரடி - ரூ.1,799 விலையில் கேமிங் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

Update: 2022-08-06 04:57 GMT
  • கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது.
  • அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் கிஸ்பிட் அல்ட்ரா பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. சதுரங்க வடிவிலான டையல் கொண்டு இருக்கும் கிஸ்பிட் அல்ட்ரா தோற்றத்தில் கிட்டத்தட்ட ஆப்பிள் வாட்ச் போன்றே காட்சியளிக்கிறது.

எனினும், இதன் விலை பெருமளவு குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கிஸ்பிட் அல்ட்ரா IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அலெக்சா மற்றும் சிரி போன்ற வாய்ஸ் கமாண்ட்கள், ப்ளூடூத் காலிங் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதுதவிர நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


கிஸ்பிட் அல்ட்ரா சிறப்பம்சங்கள்:

- 1.69 இன்ச் HD வளைந்த டச் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே

- IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி

- 60 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்

- பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்கள்

-- பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றம் மைக்ரோபோன்

- ப்ளூடூத் காலிங்

- SpO2, ஹார்ட் ரேட், ஸ்லீப் சென்சார்கள்

- அலெக்சா மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

- 15 நாட்கள் பேட்டரி பேக்கப்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5 ஆயிரத்து 999 ஆகும். ஆனால் இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 699 தான். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ ரூ. 1,799 விலையில் வாங்கிட முடியும். இது அறிமுக சலுகையாக குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதநு 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனை ஆகஸ்ட் 07 ஆம் தேதி தொடங்குகிறது. கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பர்கண்டி மற்றும் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News