கணினி

ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Update: 2022-09-23 05:19 GMT
  • கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்வாட்ச் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிஸ்பிட் குளோ மாடலில் மெல்லிய, எடை குறைந்த மற்றும் ஸ்போர்ட் டிசைன், அலுமினியம் அலாய் பாடி வழங்கப்பட்டு உள்ளது. இதில் 1.37 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 420x420 பிக்சல் ரெசல்யூஷன், லெதர் ஸ்டிராப்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பல்வேறு வாட்ச் பேஸ்கள், பயோமெட்ரிக் சென்சார்கள், இதய துடிப்பு மாணிட்டரிங், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் டிராக்கிங் என ஏராளமான சுகாதார அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது.

தற்போது கிஸ்பிட் குளோ மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது மட்டும் கிஸ்பிட் குளோ வாட்ச் இந்த விலையில் விற்பனை செய்யப்படும். அதன் பின் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படும்.

கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பிரவுன், பர்கண்டி போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் பல்வேறு ஸ்டிராப் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News