கணினி

ரூ. 87-க்கு கிடைக்கும் பிஎஸ்என்எல் சலுகை - இவ்வளவு பலன்களா?

Update: 2023-03-18 07:49 GMT
  • பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு குறைந்த விலை சலுகையை வழங்கு வருகிறது.
  • குறைந்த விலை பிஎஸ்என்எல் சலுகை தினமும் 1 ஜிபி டேட்டா, வாய்ஸ் காலிங் போன்ற பலன்களை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 87 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் பிஎஸ்என்எல் உள்பட அனைத்து நிறுவனங்களும் தங்களின் சலுகை விலையை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் அனைத்து வட்டாரங்களிலும் தனது எண்ட்ரி லெவல் சலுகை விலையை ரூ. 155 ஆக உயர்த்திவிட்டது.

அந்த வகையில் புதிய ரூ. 87 சலுகை பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கால வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை வாய்ஸ் கால் மற்றும் டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே இந்த சலுகை வழங்கப்பட்டு வருவதால், பலரும் இதனை ஏற்கனவே பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

 

பிஎஸ்என்எல் ரூ. 87 பலன்கள்:

பிஎஸ்என்எல் ரூ. 87 சலுகை மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இந்த சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஹார்டி மொபைல் கேம்ஸ்-இன் கேமிங் பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் மட்டும் இணைக்கப்படவில்லை. அந்த வகையில், இந்த சலுகை மொத்தத்தில் பயனர்களுக்கு 14 ஜிபி டேட்டா வழங்குகிறது.

தினமும் 1 ஜிபி டேட்டா போதாத என்ற வகையில், பயனர்கள் ரூ. 97 விலை சலுகையை தேர்வு செய்யலாம். இந்த சலுகையிலும் பயனர்களுக்கு எஸ்எம்எஸ் பலன்கள் வழங்கப்படவில்லை. எனினும், இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இது தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்கள் மொத்தத்தில் 30 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News