கணினி
null

70 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு

Published On 2023-03-25 10:08 GMT   |   Update On 2023-03-25 10:31 GMT
  • பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 197 விலையில் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது.
  • புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிகபட்சம் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அனைவருக்கும் ஏற்ற விலையில் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை தேர்வு செய்ய விரும்புவோருக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பிஎஸ்என்எல் புதிய பிரீபெயிட் சலுகையின் விலை ரூ. 197 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இதில் 18 நாட்களுக்கு இலவச பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது டெலிகாம் துறையில் சலுகை விலை மற்றும் பலன் விவரங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகையின் பழைய பலன்கள் மாற்றப்பட்டுவிட்டது.

அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 197 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா (தினமும் 2 ஜிபி), 100 எஸ்எம்எஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. பலன்களை பொருத்தவரை இந்த சலுகை தினசரி கட்டணம் ரூ. 2.80 என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

இலவச பலன்களின் வேலிடிட்டி 15 நாட்கள் மட்டுமே ஆகும். அதன் பின் இவற்றை பயன்படுத்த கட்டணங்கள் வசூலிக்கப்படும். புதிய பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை பெரும்பாலான டெலிகாம் வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், சில வட்டாரங்களில் இது வழங்கப்படாது என்றே தெரிகிறது.

Tags:    

Similar News