கணினி

3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் கொண்ட போட் ராக்கர்ஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

Update: 2023-01-27 10:51 GMT
  • போட் நிறுவனத்தின் புதிய இயர்போன் THX டியூனிங் செய்த ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
  • மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ஆடியோ மோட்களை ஸ்விட்ச் செய்ய விசேஷ பட்டன் உள்ளது.

போட் நிறுவனம் தனது புதிய நெக்பேண்ட், ராக்கர்ஸ் 378 இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புது நெக்பேண்ட் இயர்போன் அளவில் பெரிய டைனமிக் டிரைவர்கள், 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் தொழில்நுட்பம், THX சார்பில் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. போட் இம்மார்டல் 121 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

போட் ராக்கர்ஸ் 378 மாடல் பயனர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்கும் நோக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மென்மையான சிலிகான், எடை குறைந்த ஃபிரேம் கொண்டிருக்கிறது. இதன் நெக்பேண்ட்-இல் இயர்போனை கண்ட்ரோல் செய்வதற்கான பட்டன்கள் உள்ளன. மேலும் இயர்பட்களில் காந்தம் உள்ளது.

ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் போட் ராக்கர்ஸ் 378 மாடல் 200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. இந்த இயர்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. ராக்கர்ஸ் 378 மாடலில் உள்ள 10mm டைனமிக் டிரைவர்களை THX டியூனிங் செய்து 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் வழங்குகிறது.

இந்த தொழில்நுட்பம் அதிநவீன சரவுண்ட் சவுண்ட், முப்பரிமாண கோணத்தில் ரியலிஸ்டிக் ஆடியோ மற்றும் பொசிஷனல் அக்யுரசி வழங்குகிறது. இதில் உள்ள ஸ்பெஷல் பீஸ்ட் மோட் ஆடியோ லேடன்சியை 65ms வரை குறைக்கும். மோட்களிடையே மாறிக் கொள்ள பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, போட் பாரம்பரிய சவுண்ட் உள்ளிட்டவை கேமிங்கிற்கு ஏற்ற இயர்பட்ஸ் ஆக மாற்றுகிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

போட் ராக்கர்ஸ் 378 மாடல்- ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ, மிட்நைட் புளூ மற்றும் வைப்ரண்ட் ரெட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போட் லைஃப்ஸ்டைல், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News