கணினி

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது அமேஸ்பிட் பிப் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-07-08 06:13 GMT   |   Update On 2022-07-08 06:13 GMT
  • அமேஸ்பிட் பிப் 3 ப்ரோவில் உள்ள ஜிபிஎஸ் பயனரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது.
  • பிளாக், பிங்க் மற்றும் கிரீம் கலர் வேரியண்டில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கிறது.

அமேஸ்பிட் நிறுவனம் இந்தியாவில் அதன் பிப் 3 ப்ரோ மாடல் ஸ்மாட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 1.69 இன்ச் அளவும் 2.5டி கிளாஸ் + AF கோட்டிங் உடன் கூடிய கலர் TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நோடிபிகேஷன், ஹெல்த் மற்றும் பிட்னஸ் விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம். இதய துடிப்பை கண்காணிக்கும் அம்சமும் இதில் உள்ளது.


இதுதவிர இரத்த ஆக்ஸிஜன் அளவு, மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, மன அழுத்த நிலை மற்றும் தூக்கத்தின் தர கண்காணிப்பு ஆகிய அம்சங்களில் இதில் இடம்பெற்று உள்ளது. PAI எனும் ஹெல்த் அசெஸ்மென்ட் சிஸ்டமும் இதில் இடம்பெற்றுள்ளது. 2 வாரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப்பும் இதில் உள்ளது.

PAI ஆனது ஒரு ஸ்மார்ட் அல்காரிதம் மூலம் ஆரோக்கியம், உடற்தகுதி மற்றும் பிற அளவிலான தரவுகளை ஆல்-ரவுண்ட் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்துகிறது. அமேஸ்பிட் பிப் 3 ப்ரோவில் உள்ள ஜிபிஎஸ் பயனரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது. பிளாக், பிங்க் மற்றும் கிரீம் கலர் வேரியண்டில் கிடைக்கும் இந்த ஸ்மாட்வாட்ச்சின் விலை ரூ.3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News