தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 1 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

ரத்த தான கொடையாளர்கள் சமூகத்தின் உண்மையான உயிர்காக்கும் தூதர்கள் - முதலமைச்சர் விஜய்

* அறுவை சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் உயிர்களைக் காக்க ரத்ததானம் இன்றியமையாதது.

* ஒவ்வொரு சொட்டு ரத்தமும், ஒரு மனிதனின் உயிரைக் காப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது.

நடிகர் சிவாஜி கணேசன் 99-வது பிறந்தநாள்- அமைச்சர்கள் மரியாதை

* தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

* சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெல்கடரமணன் பங்கேற்பு.

GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

கடைசியாக கேட்ட குரல்... சிவாஜி கணேசன் குறித்து கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

* இன்னும் சிலவாரங்களே சிவாஜி உயிரோடிருப்பார் என்று தெரியாத நேரம்

* நீ இறந்தது ஒருமுறைதான்; ஒவ்வொரு படத்திலும் நித்தம் நித்தம் பிறந்துகொண்டிருக்கிறாய்

பழனியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.சி.ஐ.டி. தீவிரம்

* மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளி குறித்தும் இதற்கு பின்புலத்தில் இருந்த மற்ற நபர்கள் குறித்தும் துப்பு கிடைக்கவில்லை.

* முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதால் இதுவரை நடத்திய விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜியின் கலைப்பணியை போற்றி வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்

* திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.

* கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்!

நாளை முதல் வெற்றிப் பயணம் திட்டம்- முதலமைச்சர் விஜய் வீடியோ வெளியீடு

* வெற்றி பயண திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

* அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2 முதல்

முதலமைச்சர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார் - சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாராட்டு

* முதலமைச்சர் விஜய் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன.

* நீதிபதி சஞ்சய் குமார் கருத்தை நீதிபதி சஞ்சய் சச்தேவா ஆமோதித்தார்.

வீரம் என்றால் இதுதான்! இந்திய கேப்டன் சுமித் மச்சாரின் துணிச்சலுக்கு பாராட்டுகள்! - தமிழிசை

உயிருக்கு ஆபத்தான தருணத்திலும் கடமையை கைவிடாத இந்திய கேப்டன் சுமித் மச்சாரின் துணிச்சலுக்கு பாராட்டுகள்!

இந்தியர்களின் கடமை உணர்வுக்கும் தைரியத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

SCROLL FOR NEXT