

தென் தமிழ்நாடு மற்றும் தென் கேரள பகுதிகளில் இயல்பான அளவை விட அதிகமாகவோ அல்லது இயல்பான அளவிலோ மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழ்நாட்டில் அக்.15 முதல் 21-ந்தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
* பருவமழை காலத்தில் தென் தீபகற்ப இந்தியாவில் சராசரியாக மழைப்பொழிவு இருக்கலாம்.
* தென் தமிழ்நாடு மற்றும் தென் கேரள பகுதிகளில் இயல்பான அளவை விட அதிகமாகவோ அல்லது இயல்பான அளவிலோ மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* நடப்பாண்டில் எல் நினோ காரணி வலுவாக உள்ளது. இது நவம்பர் இறுதி வரை வலுவாக நீடித்து படிப்படியாக குறையத் தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.