

நடுவானில் நாசகர வேலையில் ஈடுபட முயன்ற சக விமானியிடம் இருந்து கத்திக்குத்து வாங்கி விமானத்தில் இருந்த 180 பேரின் உயிர் காத்த இந்திய விமானி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற ப்ளை துபாய் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது.
விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு விமானியுடன், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியும் சண்டை பிடித்துள்ளார். ஓமன் நாட்டு விமானி விமானத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இதை எதிர்த்து ஓமன் விமானியுடன் போராடிய போது, இந்திய விமானி இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
விமானம் திடீரென வான்பரப்பில் சுழன்று சுமார் 14,000 அடிக்கும் மேல் கீழே இறங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இஸ்ரேலிய பயணி மற்றும் விமானப் பணிப்பெண் உடனடியாக காக்பிட் அறைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் அந்த ஓமன் உதவி விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டிப்போட்டனர். அதே விமானத்தில் பயணித்த மற்றொரு Off duty விமானியும் காக்பிட்டுக்குள் வந்து விமானத்தை மீண்டும் சீரான நிலைக்குக் கொண்டு வர உதவினார்.
சவுதியில் விமானம் தரையிரங்கிய போது, ஊழியர்கள் இந்திய விமானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து விமானம் சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சவுதியில் தரையிறக்கப்பட்ட பயணிகளை இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, இஸ்ரேல் வேறு விமானத்தை அனுப்பியது. அவர்கள் பாத்திரமாக பென் குரியன் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கும் துணிச்சலாக செயல்பட்ட பயணி மற்றும் பணியாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக கத்திக்குத்து காயம் பெற்று தற்போது சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலரின் தன் உயிரை பணயம் வைத்து பலரின் உயிரை காப்பாற்றியது இந்தியர்களை பெருமை கொள்ள செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் பின்னணி குறித்த தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மும்பை நகரின் கத்கோபர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்மித் மச்சார்.
பள்ளிப் படிப்பிற்குப் பின், குடும்பத் தொழிலைப் பார்த்துக்கொள்ள டெக்ஸ்டைல் இன்ஜீனியரிங் படிப்பைப் படித்த மச்சார் அதன்பின் விமானத் துறையில் ஆர்வம் கொண்டு, நியூசிலாந்தில் விமானிக்கான கோர்ஸ் படித்திருக்கிறார்.
மும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் கமாண்டராகப் பணிபுரிந்துள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில், விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் ‘லைன் டிரெய்னிங் கேப்டனாகவும்’ 2020ம் ஆண்டு நவம்பர் முதல் 2022ம் ஆண்டு ஜூன் வரை இருந்திருக்கிறார்.
2022ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஃபிளை துபாய் விமான நிறுவனத்தில் கேப்டனாகப் பணிபுரிந்து வருகிறார். வேலைக்காக துபாயில் வசித்து வந்துள்ளார்.
ஸ்மித் மச்சாருக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் ஃபிளையிங் அனுபவம் உள்ளது.
தற்போது வூதி அரேபியாவின் வடமேற்கில் உள்ள தபூக் நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய தூதரக அறிக்கைபடி, "அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது காயங்களிலிருந்து விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம்.
நாங்கள் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். சவுதி அதிகாரிகளுடன் இணைந்து அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்போம்.
அவரது நல்வாழ்விற்காக சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்றும் குடும்பத்தினருக்கு உறுதியளிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.