கைகொடுத்த தொலைக்காட்சி தொடர்.. விமானத்தை இயக்க உதவிய பயணி பகிர்ந்த அனுபவம் - நேரில் பாராட்டிய நேதன்யாகு

இந்திய விமானி இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
நேதன்யாகு, யனிவ்
Published on: 
Summary

ஓமன் விமானியால் கடத்தப்பட்டதாக கூறப்படும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் துணிச்சலை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பாராட்டியுள்ளார்.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற ப்ளை துபாய் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது.

விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு விமானியுடன், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியும் சண்டை பிடித்துள்ளார். ஓமன் நாட்டு விமானி விமானத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து ஓமன் விமானியுடன் போராடிய போது, இந்திய விமானி இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

விமானம் திடீரென வான்பரப்பில் சுழன்று சுமார் 14,000 அடிக்கும் மேல் கீழே இறங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இஸ்ரேலிய பயணி மற்றும் விமானப் பணிப்பெண் உடனடியாக காக்பிட் அறைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் அந்த ஓமன் உதவி விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டிப்போட்டனர். அதே விமானத்தில் பயணித்த மற்றொரு Off duty விமானியும் காக்பிட்டுக்குள் வந்து விமானத்தை மீண்டும் சீரான நிலைக்குக் கொண்டு வர உதவினார்.

சவுதியில் விமானம் தரையிரங்கிய போது, ஊழியர்கள் இந்திய விமானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து விமானம் சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சவுதியில் தரையிறக்கப்பட்ட பயணிகளை இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, இஸ்ரேல் வேறு விமானத்தை அனுப்பியது. அவர்கள் பாத்திரமாக பென் குரியன் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கும் துணிச்சலாக செயல்பட்ட பயணி மற்றும் பணியாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பயணி பகிர்ந்த அனுபவம்

பென் குரியன் விமான நிலையம் வந்தடைந்த பயணிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் வரவேற்றார். துணிச்சலாக செயல்பட்ட பயணியை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். அவர் பெயர் யனிவ் என கூறப்படுகிறது.

யனிவ் என்ற அந்த பயணி நேதன்யாகுவிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அவர் விவரித்ததாவது, "நானும் மற்றொரு பயணியும் விமானத்தின் காக்பிட்டிற்குள் நுழைந்தோம்.

அங்கே, கதவிற்கருகில் விமானி காயங்களுடன் கிடப்பதைக் கண்டோம். இரண்டு இருக்கைகளுக்கு இடையில் கட்டுப்பாட்டுக் கருவிகளின் அருகே அந்தப் பயங்கரவாதியை நான் பார்த்தேன்.

விமானத்தைப் செயலிழக்கச் செய்வதற்காக அவன் கட்டுப்பாட்டுக் கருவிகளை அழிக்க முயன்றுகொண்டிருந்தான்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, "இருக்கைகளில் விமானிகள் யாரும் இல்லை. நான் அந்த பயங்கரவாதியைப் பிடித்து, அவனை அடக்க உதவுவதற்காக மற்ற இஸ்ரேலிய பயணிகளை அழைத்தேன். நான் தான் முதலில் அவனை வெளியே இழுத்தேன்.

விமானம் கடுமையாகச் சாய்வதை நான் உணர்ந்தபோது, ​​மீண்டும் உள்ளே குதித்து, கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தேன்.

'மே டே' (விமான விபத்துகள் பற்றிய தொலைக்காட்சி ஆவணத் தொடர்) பார்த்திருந்ததால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்திருந்தது.

விமானம் சிறிது நேராகத் தொடங்கியது, பின்னர் விமானி, தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக என்னிடம் கூறினார்." என விவரித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com