போர்ச்சுகல் கால்பந்து அணியில் இருந்து விலகினார் ரொனால்டோ.. என்ன ஆனது?

அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ரொனால்டோ
ரொனால்டோ
Published on: 
Summary

போர்ச்சுகல் கால்பந்து அணியில் இருந்து ரொனால்டோ விலகியுள்ளார்.

நேஷன்ஸ் லீக் தொடரில் போர்ச்சுகல் அணி விளையாடி வருகிறது. இதில் செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று நார்வே அணிக்கு எதிராக நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்க லெவனில் இடம் பெறவில்லை. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றது.

தொடர்ந்து நாளை (அக்டோபர் 2) டென்மார்க் உடன் போர்ச்சுகல் அணி விளையாட உள்ளது. இதற்காக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தனது சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை. இது அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற சந்தேகத்தை எழுப்பியது.

பயிற்சியாளர் பதில்

டென்மார்க் உடனான ஆட்டத்தில் ரொனால்டோ விளையாடுவாரா என செய்தியாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ‘அனைத்தும் எங்கள் திட்டப்படி சென்றால் கோன்சாலோ ராமோஸ் விளையாடுவார். எனக்கு ரொனால்டோ களத்தில் வேண்டுமென்றால், அவர் களத்துக்கு வருவார். எனக்கு வேண்டாம் என்றால், அவர் வரமாட்டார்’ என்று தெரிவித்தார்.

மீட்டிங்

இந்த கருத்து உரசலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. நிலைமையை சரிசெய்வதற்காக, ரொனால்டோ, போர்ச்சுகல் தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் மற்றும் போர்சசுகல் கால்பந்து கூட்டமைப்பு (FPF) தலைவர் பெட்ரோ புரோயென்கா ஆகியோருக்கு இடையே நேற்று (புதன்கிழமை) ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

விலகல்

இதில் கலந்துகொண்ட பின் நேற்று மாலை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பதவில், போர்ச்சுகல் தேசிய அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “தேசிய அணியின் பயிற்சியாளர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் உடன் பேசினேன்.

அதன் பிறகு நான் தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தேன்.

நான் எப்போதும் என்னை அர்ப்பணித்திருந்த தேசிய அணியை விட்டு விலக என்னைத் தூண்டிய காரணங்கள் குறித்த உண்மையை, உரிய நேரத்தில் அனைத்து போர்த்துகீசிய மக்களிடமும் கூறுவேன்.

தற்போது, ​​போர்ச்சுகல் அணிக்கும் எனது சக அணி வீரர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டிய நேரம் இது.” என்று சமூக வலைதள பதிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

போர்ச்சுகல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி உள்ள ரொனால்டோ, 146 கோல்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com