சிட்டாய் பறந்த 9 வருடம்.. தந்தையின் Live-வில் தோன்றி வைரலான குழந்தைகள் எப்படி இருக்கிறனர் இப்போது?

குழந்தையான அவளுடைய தம்பியும் தனது வாக்கரில் அறைக்குள் வந்தான்.
சிட்டாய் பறந்த 9 வருடம்.. தந்தையின் Live-வில் தோன்றி வைரலான குழந்தைகள் எப்படி இருக்கிறனர் இப்போது?
Published on: 
Summary

பிபிசி நேர்காணல் நிகழ்வில் உலக முழுவதும் வைரலான குடும்பம் தங்களின் தற்போதைய லைஃப் அப்டேட்டை கொடுத்துள்ளது.

அது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம். மூத்த பத்திரிகையாளரான ராபர்ட் கெல்லி தென் கொரியாவின் பூசானில் உள்ள தனது வீட்டு அலுவலகத்திலிருந்து பிபிசி தொலைக்காட்சி நேர்காணல் நேரலையில் சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசிக்கொண்டிருந்தபோது, ​​அவருடைய நான்கு வயது மகள் பிரகாசமான மஞ்சள் நிற ஸ்வெட்டரை அணிந்து அறைக்குள் குறும்பாக நடனமாடியபடி நுழைந்தாள்.

நேரடி ஒளிபரப்பைப் பொருட்படுத்தாமல், அவள் தன் தந்தையின் மேசையை நோக்கி சென்றாள். சில கணங்கள் கழித்து, குழந்தையான அவளுடைய தம்பியும் தனது வாக்கரில் அறைக்குள் வந்தான்.

கெல்லியின் மனைவி ஜுங்கா கிம், அறைக்குள் ஓடிவந்து இரண்டு குழந்தைகளையும் அவசர அவசரமாக வெளியேற்றினார்.

இது அத்தனையும் உலகம் முழுவதும் மக்கள் பிபிசி நேரலையை பார்த்துக்கொண்டிருந்தபோது நடந்தது.

​​நேரலையில் இருந்த கெல்லி, புன்னகையை மறைக்கவும், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கவும் தன்னால் முடிந்தவரை முயற்சித்தார்.

"மன்னிக்கவும், என் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார் அவர்.

வைரல்

இந்த வீடியோ பின்னாட்களில் இணையத்தில் படு வைரலானது. யூடியூபில் பல கோடி பார்வைகளைப் பெற்றது.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், உலகளவில் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்தபோது, ​​பயனர்கள் அதனுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால், அது மீண்டும் வைரலானது.

காலங்கள் கடந்தும் இந்த வீடியோவை பார்ப்போரின் முகத்தின் அக்குழந்தைகளின் கள்ளம்கபடமற்ற செயல் புன்னகையை கொண்டு வர தவறுவதில்லை.

அப்படி உலகம் முழுவதிலும் பலரின் மனம் கவர்ந்த இந்த குடும்பம் தற்போது எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும் தானே!.

லைஃப் அப்டேட்

இந்த வீடியோவுக்கு பிறகு BBC Dad என்ற பெயரை பெற்ற கெல்லி அந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது 4 வயது மகள் மேரியனுக்கு தற்போது 13 வயது. குழந்தை ஜேம்ஸுக்கு இப்போது 10 வயது.

தன் மகனுடன் மலையேறும் மற்றும் மனைவியுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்ட அவர், "சில பிபிசி அப்பா பதிவுகள். ரொம்ப நாளாகிவிட்டது," என்று எழுதியிருந்தார்.

இந்த புதிய புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. "எனக்கு மிகவும் பிடித்த வீடியோ! இந்தத் தகவலுக்கு நன்றி, அப்பா," என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

"மேரியன் கம்பீரமாக நடந்து வரும் அந்த நேர்காணலை நான் இப்போதும் தவறாமல் பார்க்கிறேன்... அது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். அவர்கள் அனைவரும் வளர்ந்துவிட்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை!" என்று மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

காலம் எவ்வளவு வேகமாகப் பறக்கிறது என்பதை இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com