சிம்மக் குரலால் திரையுலகை ஆண்ட நடிகர் சிவாஜி கணேசன்..!- மு.க.ஸ்டாலின் புகழாரம்

முதலமைச்சர் விஜய் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
DMK Leader MK Stalin
Published on: 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாள்!

இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com