வழிபாடு

weekly rasipalan 23.11.2025 to 29.11.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

Published On 2025-11-23 11:15 IST   |   Update On 2025-11-23 11:16:00 IST
  • ரிஷபம் சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
  • கன்னி சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம்.

மேஷம்

வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் 2,7ம் அதிபதி சுக்ரன் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசி அதிபதி செவ்வாய்க்கு 2, 5,8 எனும் பணபரஸ்தான சம்பந்தம் இருப்பதால் பணத் தேவைகள் பூர்த்தியாகும். வராக் கடன்கள் வசூல் ஆகும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் அகலும்.தன வரவு திருப்தி தரும். ஆடம்பர செலவினை குறைத்து சேமிப்பிற்கு முயற்சி செய்வீர்கள்.குடும்ப முன்னேற்றம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய உத்தியோக முயற்சிகள் பலிக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும்.சகோதர சகோதரிகளால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் உருவாக லாம்.வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை இருக்கும்.வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். காலபைரவர் வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.

ரிஷபம்

சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சூரியன், செவ்வாய், சனி, சுக்ரன் பார்வை உள்ளது. சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுவதால் புதிய தொழில் ஒப்பந்தம் மூலமாக அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அசுப கிரகங்களின் பார்வை ராசிக்கு உள்ளதால் இனம் புரியாத மனசஞ்சலம் இருக்கும்.ஓய்வின்றி உழைக்க நேரும். பல புதிய மாற்றங்கள் உண்டாகும். வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர்ப் பயணங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமா இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும்.திருமண வயதினருக்கு வரன்பார்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். 25.11.2025 அன்று காலை 4.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு இன்னல்களை நீக்கும்.

மிதுனம்

எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் வாரம்.வார இறுதியில் புதன்,சனி வக்ர நிவர்த்தி பெறுகிறார்கள். தன ஸ்தானத்தில் குரு பகவான் என முக்கிய கிரக நிலவரங்கள் மிதுன ராசிக்கு மிக சாதகமாக உள்ளது. சிலரது பிள்ளைகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். சுக, போக பொருட்களின் சேர்க்கை இரட்டிப்பாகும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும். 25.11.2025 அன்று காலை 4.27 மணி முதல் 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்தால் எந்தவித இன்னல்களும் வராது.நவகிரக அங்கார கனை வழிபடவும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சீனிவாச பெருமாளை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

கடகம்

புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது.அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.மன உளைச்சலைத் தந்த பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும்.வீடு, வாகன வசதிகள் மேம்படும். அரசு ஊழியர்கள் தடைபட்ட பதவி உயர்விற்கு முயற்சிக்கலாம். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். மாமன், மைத்துனன் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீண் விரயங்கள் மட்டுப்படும். வைத்தியச் செலவு குறையும். பிள்ளைகளின் எதிர் காலம் குறித்த திட்டங்கள் வெற்றியில் முடியும். 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி முதல் 29.11.2025 அன்று இரவு 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பச் சுமை கூடும். வரவை விட செலவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். சிவ வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.

சிம்மம்

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று அஷ்டம ஸ்தானத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார்.சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.சிலர் பூமியை விற்று கடன் அடைக்கலாம். சிலருக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் வாசல் கதவை தட்டும். நல்ல வாய்ப்புகள் தடைபடும்.சிலர் பணியில் ஏற்பட்ட வீண் பழியால் வேலையில் இருந்து விலகலாம். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலம் என்பதால் யாரிடமும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிரத்தை மற்றும் கடின உழைப்பால் தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் பெற முடியும்.சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் விவசாயிகள் பயிர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகலாம்.29.11.2025 அன்று இரவு 8.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மேலதிகாரி அதிக பணிச்சுமையை வழங்கலாம்.சிலர் ஆரோக்கியத்தை சீராக்க மாற்று மருத்துவ முறையை நாடலாம். விநாயகரை வழிபடுவதால் தீயவினைகள் அகலும்

கன்னி

சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுகிறார். லாப ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் என கிரக நிலைகள் மிக மிக சாதகமாக உள்ளது.பண வரவு திருப்தியாக இருக்கும்.பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். தடைபட்ட திருமண முயற்சிகள் துரிதமடையும். விலகிச் சென்ற உறவுகள், உடன் பிறந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் ஏற்படும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபம் அதிகரிக்கும். வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கவும்.

துலாம்

புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும் வாரம்.ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற புதன் உள்ளார்.புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத் தேவைகளுக்கு இப்பொழுதே சேமிப்பீர்கள்.சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும்.திருமண முயற்சி சாதகமாகும்.பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் வருந்தியவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால் நல்ல பலனை அடைய முடியும். கணவன் மனைவி கருத்தொற்றுமை சிறப்படையும். பிள்ளைகளிடம் இருந்து எதிர்பாராத அன்பு பரிசு கிடைக்கும்.எட்டாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. ஜாமின் போடக்கூடாது.தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மகாலட்சுமி வழிபாட்டால் அபிவிருத்தி பெற முடியும்.

விருச்சிகம்

தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கைக்கு குரு பார்வை உள்ளது. நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் மூலம் முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்வீர்கள். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கூடிவரும்.வீடு, வாகன யோகம்,புத்திர பாக்கியம் உண்டாகும்.வீட்டில் திருமணம் போன்ற சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். பூமி, மனையின் மதிப்பு கூடும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அண்டை அயலாருடன் இருந்த சண்டை சச்சரவுகள், பிணக்குகள் மறையும். ஏழாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையா ளர்கள், வாழ்க்கை துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. ஓரிரு வாரங்களுக்கு திருமணம் முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.சிலருக்கு பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.முருகன் வழிபாட்டால் நினைத்ததை அடைய முடியும்.

தனுசு

நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளா தாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் நிலவும்.பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.மனமகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் நடக்கும்.ஆடம்பர விருந்து உபசரணைகளில் கலந்து கொள்ளக்கூடிய அமைப்பு உள்ளது. எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டு எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.மதிப்பு மிகுந்த கவுரவப் பதவிகள் தேடி வரும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சிரத்தையுடன் செயல்படுவீர்கள். இது அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் தொழில், கல்விக்காக இடம் பெயரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகளுக்கு உதவியாக இருக்கும்.

மகரம்

முன்னேற்றமான வாரம்.ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. ஆன்ம பலம் பெருகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.ஆழ்ந்த அறிவும் சிந்திக்கும் திறனும் கூடும். சமூக அந்தஸ்து நிறைந்த முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்.விலகி சென்ற உறவுகள், நட்புகள் தேடி வருவார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும்.மனச் சங்கடம் மறையும். செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் சுய ஜாதகத்தின் படி செயல்படவும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாடு வெளி மாநிலத்திற்கு இடம் பெயரலாம்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும்.வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகள் அகலும். அழகான ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

கும்பம்

சுமாரான வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். ராசிக்கு செவ்வாய் ராகு சம்பந்தம் உள்ளது.முன்னோர்களின் சொத்தில் முறையற்ற பங்கீடு கிடைக்கும். உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படும். வேலையில், தொழிலில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும். பொருளாதார விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியம். சிலரின் பிள்ளைகளுக்கு தொழில் முன்னேற்றமோ, அரசாங்கப்பணியோ தேடி வர வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஏழரைச் சனியால் எவ்வளவு இடையூறுகள் நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். குழந்தை பேற்றில் உள்ள குறைபாட்டை நீக்க மருத்துவ உதவியை நாடலாம். சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும்.கார்த்திகை மாத சோம வார சங்கு பூஜையில் கலந்து கொள்ள சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

மீனம்

தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும் வாரம்.ராசிக்கு உச்ச குருவின் வக்கிர பார்வை உள்ளது.ராசி அதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் காலமும், நேரமும் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் ஜென்மச் சனியால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.வீடு, மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும் என்ற தாரக மந்திரத்தை மனதில் குறிக்கோளாக வைத்து செயல்படுவீர்கள். சில நன்மைகளும், மாற்றங்களும் நடக்கும்.தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலைமாறும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்ப டுத்துவது புத்திசா லித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். ஆண் வாரிசு உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. தினமும் குரு கவசம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News