weekly rasipalan 08.03.2026 to 14.03.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- ரிஷபம் வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் வாரம்.
- கடகம் கடமையில் கவனமாக செயல்பட வேண்டிய வாரம்.
மேஷம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. கற்பனைகள், கனவுகள் நனவாகும். பணவரவு ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும்.
9.3.2026 அன்று காலை 9.30 முதல் 11.3.2026 அன்று இரவு 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருங்கிய நண்பர்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அதனால், தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாட்டை தவிர்க்கலாம். அக்கம் பக்கத்தினரின் தீய பார்வையால் ஆரோக்கியம் குறையும். முருகன் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.
ரிஷபம்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9,10-ம் அதிபதி சனியுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும்.
சேமிப்புகள் உயரும். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகும். பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உதயமாகும். நண்பிகளுடன் இணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.
வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 11.3.2026 அன்று இரவு 10 மணி முதல் 14.3.2026 காலை 9.33 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும். காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.
மிதுனம்
வெற்றிகரமான வாரம். ராசிக்கு ஒன்பதா மிடத்தில் உள்ள கிரக சேர்க்கை சில நன்மைகளையும் சில தீமைகளையும் ஏற்படுத்தலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி கூடும். வளர்ச்சிக்கான பாதை தென்படும். முக்கிய தேவைகளுக்கு பண வரவு இருக்கும். விரும்பிய கடன் தொகை கிடைக்கும். காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமாகும். பெண்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் மகழ்ச்சி அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும். முன்னோர்களுக்கு முறையான பித்ருக் கடன் தீர்க்கும் வாய்ப்புகள் உருவாகும்.
பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பெற்றோர்களின் மணிவிழா என வீட்டில் தொடர் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். 14.3.2026 அன்று காலை 9.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆத்ம பலம் கூடும்.
கடகம்
கடமையில் கவனமாக செயல்பட வேண்டிய வாரம். கடக ராசிக்கு 4,11ம் அதிபதியான சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் உச்சமடைகிறார். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும். காலிமனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு.
சிலர் உயர் கல்விக்காக, வேலைகாக வெளியூர், வெளிநாடு செல்வர். பேச்சை மூலதனமாக கொண்ட விற்பனை பிரதிநிதிகள், வக்கீல்கள், ஆசிரியர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சியில் நெருக்கமான நண்பர்கள் மூலம் கடன் கிடைக்கும். எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். சொத்துக்காக பிரிந்து சென்ற உறவுகள் தேடி வந்து இணைவார்கள். விநாயகர் வழிபாட்டால் காரிய சித்தி அடைய முடியும்.
சிம்மம்
சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் சம சப்தம ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு வேலையில் விரும்பிய சலுகைகள் கிடைக்கும்.
அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். சிலருக்கு தேவையில்லாத எண்ணங்கள் தூக்கமின்மை, மன சஞ்சலம் உண்டாகலாம். மனதில் இருக்கும் ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். பூர்வீகச் சொத்தை விற்று புதியசொத்துகள் வாங்கும் சிந்தனை உருவாகும்.
சிலர் அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். எதிர்பாராத செலவுகள் தோன்றும். கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமண வயதினருக்கு காலதாமதத் திருமணம் நல்லது. தினமும் சிவபுராணம் படித்து சிவனை வழிபடவும்.
கன்னி
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைய வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6ல் வக்ர கதியில் ராகுவுடன் சஞ்சரிக்கிறார். இதற்கு குருப் பார்வை இருப்பதால் இது திறமையை மெருகேற்றி கொள்ள உகந்த அமைப்பாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தாய் வழி குடும்ப விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு இன்பங்களை மலரச் செய்யும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். தினமும் மகாவிஷ்ணுவை வழிபடவும்.
துலாம்
கற்பனைகள், கனவுகள் நனவாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் சனியுடன் இணைந்து உச்சம் பெறுகிறார். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும்.
புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். சிலர் புதிய வாகனம் வாங்க திட்டமிடுவார்கள். சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
சிலருக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உண்டாகும். கருவுற்ற பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.
விருச்சிகம்
சுமாரான வாரம். ராசி அதிபதி செவ்வாய் சூரியன் ராகு மற்றும் வக்ரம் பெற்ற புதனுடன் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். தூக்கம் குறையும். பயணங்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். கண், கை கால் மூட்டு வலி போன்றவற்றிற்கு சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் உள்ளது. வரவிற்கு ஏற்ற செலவு இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமத்தை சந்திப்பார்கள். ஜாமீன் சார்ந்த பிரச்சினை இருக்கும். பங்குச் சந்தையில் அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். முறையான திட்டமிடுதல் இருக்காது. உடன் பிறந்தவர்களால் பூர்வீக சொத்தால் மன உளைச்சல் இருக்கும்.
உற்றார், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு சிறு மனத் தாங்கல் உருவாகும். குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆத்ம பலம் கூடும்.
தனுசு
தன்னம்பிக்கையும், துணிவும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி கூடும். வளர்ச்சிக்கான பாதை தென்படும். முக்கிய தேவைகளுக்கு பண வரவு இருக்கும். விரும்பிய கடன் தொகை கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் குறையும்.
உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும்.
காலிமனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். நவகிரக குரு பகவானை வழிபட மேன்மையான பலன்கள் உண்டாகும்.
மகரம்
வாக்கில் நிதானம் தேவை. தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. பண வரவு ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.
தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். வீடு, மனை, திருமணம், மகப்பேறு ஆகியவை மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
நெருங்கிய நண்பர்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அதனால், தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாட்டை தவிர்க்கலாம். உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட நவகிரகங்களின் தாக்கம் குறையும்.
கும்பம்
விரும்பிய கடன் தொகை கிடைக்கும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. புதிய தொழில் கடன் கிடைக்கும். வருமானத்திற்கு மீறிய கடனை தவிர்த்தால் பின் நாட்களில் சிரமம் இருக்காது.சிலருக்கு ஜாமீன் பிரச்சினைகள் வரலாம். அல்லது புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.
சிலர் அதிக வேலைப்பளு அல்லது மன உளைச்சலால் உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெறலாம். பாகப்பிரிவினையில் உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம்.
தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. பெண்களுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். மறுமணம் வாய்ப்பு உண்டாகும். ஸ்ரீ காலபைரவரை வழிபடுவதால் மன சஞ்சலங்கள் அகலும்.
மீனம்
விபரீத ராஜயோகமான வாரம். ராசியில் சனி சுக்கிரன் சேர்க்கை உள்ளது. 3,8-ம் அதிபதி சுக்ரன் ராசியில் உச்சம் பெறுவதால் விபரீத ராஜ யோகத்தால் பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். பண வரவு சரளமாக இருப்பதால் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிலர் கவுரவம் பெருமைக்காக கடன் வாங்கி வீண் செலவு செய்வார்கள்.
சிலர் வியாபார முதலீட்டிற்கு கடன் கேட்க முனைவார்கள். சிலர் ஏதாவதொரு வகையில் ரொட்டேசன் செய்து தொழிலை பெருக்குவார்கள். பங்கு வர்த்தகத்தில் நிதானிக்க முடியாத ஏற்ற இறக்கம் நிலவும். வீடு கட்டும் பணி துரிதமாகும். அதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். அரசு அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் விரும்பத்தகாத இடமாற்றமும் உண்டாகும்.
முக்கியமான ஆவணங்கள், பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். அரசின் உதவித் தொகை கிடைப்பதில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கிய குறைபாடுகள் அதிகரிக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் இன்னல்கள் குறையும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406