வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 டிசம்பர் 2025: சங்கடஹர சதுர்த்தி

Published On 2025-12-08 08:27 IST   |   Update On 2025-12-08 08:27:00 IST
  • திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம்.
  • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-22 (திங்கட்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி இரவு 9.51 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : புனர்பூசம் காலை 9.39 மணி வரை பிறகு பூசம்

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த தினம், சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம், வழிபாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பென்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மேன்மை

ரிஷபம்-உண்மை

மிதுனம்-பதவி

கடகம்-கடமை

சிம்மம்-ஓய்வு

கன்னி-சுகம்

துலாம்- துணிவு

விருச்சிகம்-ஆர்வம்

தனுசு- முயற்சி

மகரம்-பணிவு

கும்பம்-தனம்

மீனம்-உவகை

Tags:    

Similar News