வழிபாடு

வேடனின் பாவம் போக்கிய மகா சிவராத்திரி

Published On 2026-02-11 13:13 IST   |   Update On 2026-02-11 13:13:00 IST
  • பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவ கணக்கில் எதுவும் இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது, எமதர்மனுக்கு அதிர்ச்சி அளித்தது.
  • வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது.

முன்பொரு சமயம், வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றான். அவ்வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்தான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது. வேடன், எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றியபடியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் வேடன் வீடு திரும்பினான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.

அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவ கணக்கில் எதுவும் இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது, எமதர்மனுக்கு அதிர்ச்சி அளித்தது.

வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வமரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன. வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது.

மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர்.

Tags:    

Similar News