நோய்கள் தீர்க்கும் அற்புத தலங்கள்
- அம்மனுக்கு கண்மலர் வாங்கி சாற்றினால், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள்.
- மிகவும் புனிதமானதாக கருதப்படும் இந்த தீர்த்தம், தீராத நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது.
* சென்னையில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநின்றவூர். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் 'இருதயாலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள அன்னைக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து 'மண்டையப்பம்' எனும் நைவேத்தியம் செய்து படைத்தால் தீராத தலைவலியும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
* நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ளது, நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். இந்த அம்மனுக்கு கண்மலர் வாங்கி சாற்றினால், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள்.
* திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் எனும் ஊரில் அமைந்துள்ளது, கங்கையம்மன் கோவில். இந்த அன்னைக்கு அபிஷேகம் செய்த தீர்த்தமானது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மிகவும் புனிதமானதாக கருதப்படும் இந்த தீர்த்தம், தீராத நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது.
* தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கோமதியம்மன் கோவிலில், அம்மன் சன்னிதி முன்பாக ஸ்ரீசக்கர பீடம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் அதில் அமர்ந்து வழிபட்டு வந்தால் மன நல பிரச்சனைகள் குணமாகும் என்று கூறப்படுகிறது.
* திருவள்ளூர் மாவட்டம் மணவூர் கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வயல்வெளிகளுக்கு இடையே அமைந்துள்ளது, ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் திருக்கோவில். இத்தலத்தில் தொடர்ச்சியாக 9 திங்கட்கிழமைகள் வந்து, இறைவனுக்கு வெல்லம் படைத்து வழிபட்டால் புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.