புதுச்சேரி

கோப்பு படம்.

பெயிண்டரை குத்தி கொலை செய்தது ஏன்?

Published On 2023-05-29 13:57 IST   |   Update On 2023-05-29 13:57:00 IST
  • கைதான தம்பி பரபரப்பு வாக்குமூலம்
  • பிரேத பரிசோதனை முடிவில் ஜான்பி யர் கத்தி குத்தில் காயமடைந்து இறந்து போனது தெரியவந்தது.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் நேத்தாஜி நகரை சேர்ந்தவர் ஜான்பியர் (வயது45). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி உத்திரமேரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

ஜான்பியருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது மது குடித்து விட்டு அப்பகுதியை சேர்ந்தவ ர்களிடமும், குடும்பத்தி னரிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 23-ந் தேதி ஜான்பியர் உடல் நலம் பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஜான்பியரின் வயிற்றில் ரத்த காயம் இருந்ததை கண்டனர்.

 ஆனால் வயிற்றில் ரத்த காயத்துக்கான காரணத்தை ஜான்பியரும், அவரது குடும்பத்தினரும் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜான்பியருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜான்பியர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் லூர்துமேரி தனது மகன் சாவு குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்ம சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் ஜான்பியர் கத்தி குத்தில் காயமடைந்து இறந்து போனது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணை யில் குடும்ப தகராறில் ஜான்பி யரை அவரது தம்பி பிரான்சிஸ் (39) கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உப்பளம் பழைய துறைமுக பகுதியில் பதுங்கி இருந்த பிரான்சிசை சுற்றி வளைத்து பிடித்து கைதுசெய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசார ணையில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தது ஏன் என்பது குறித்து பிரான்சிஸ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

எனது ஜான்பியர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருந்து வந்தது.

அதுபோல் சம்பவத்தன்று இரவும் குடித்துவிட்டு தகராறு செய்தார். அதனை நான் தட்டி கேட்டு தூங்க செல்லுமாறு கூறினேன். ஆனால் எனது அண்ணன் ஜான்பியர் என்னிடம் தகராறு செய்தார்.

மேலும் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ஜான்பியர் என்னை குத்த முயன்றார். உடனே நான் அந்த கத்தியை பறித்து அவரது வயிற்றில் குத்தினேன்.

கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதனை செய்யவில்லை. எதேச்சையாக நடந்த இந்த சம்பவம் கொலை யாக மாறிவிட்டது.

இவ்வாறு போலீசில் வாக்குமூலம் அளித்தார். 

Tags:    

Similar News