புதுச்சேரி

திருமண மண்டபம் அமைப்பது குறித்து கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார்.

ஏழை மக்கள் பயன்பாட்டிற்க்கு திருமண மண்டபம்- கென்னடி எம்.எல்.ஏ.

Published On 2022-11-17 10:19 IST   |   Update On 2022-11-17 10:19:00 IST
  • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3-ல்அறப்பணிஅவ்வை தோட்டத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இருந்த மண்டபம் பழுதடைந்து இடிந்து விழுந்தது.
  • அதனை நகராட்சியை சட்டரீதியாக அணுகி துரிதமான முறையில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3-ல்அறப்பணிஅவ்வை தோட்டத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இருந்த மண்டபம் பழுதடைந்து இடிந்து விழுந்தது. தற்போது அங்கு அரசமரம் வளர்ந்து அருகில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர்.

அவ்விடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முயற்சியால் வர இருக்கிறது.

அதனை நகராட்சியை சட்டரீதியாக அணுகி துரிதமான முறையில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.

இதில் அப்பகுதியை சுற்றியுள்ள ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.க. காளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News