புதுச்சேரி

நள்ளிரவு 12 மணிவரை காத்திருந்து கவர்னர் தமிழிசையோடு முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை

Published On 2023-07-07 12:59 IST   |   Update On 2023-07-07 12:59:00 IST
  • போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

புதுச்சேரி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று புதுவைக்கு வந்தார்.

தலைமை செயலகத்தில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளோடு புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

மத்திய நிதிமந்திரி வருகையையொட்டி சென்னையிலிருந்து நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு காரில் வந்தார். அவர் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் புதுவைக்கு வர காலதாமதம் ஏற்பட்டது.

முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.

அவரிடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையில் காத்திருந்தார்.

நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த கவர்னர் தமிழிசையுடன், முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது மத்திய நிதி மந்திரியிடம் புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

Tags:    

Similar News