புதுச்சேரி

கவர்னர் தமிழிசை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த காட்சி.

புதுவையில் விஸ்வகர்மா தொழில் மேளா

Published On 2023-09-20 05:19 GMT   |   Update On 2023-09-20 05:19 GMT
  • அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு
  • புதுவையில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

புதுச்சேரி:

விஸ்வகர்மா தினத்தை யொட்டி ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.

கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழிலாளர் நலத்துறை செயலர் முத்தம்மா, தொழில்துறை இயக்குநர் ருத்ர கவுடு மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் குமரன் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விஷ்வகர்மா திட்டத்தை புதுவையில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர், கவர்னர் தமிழிசை வழங்கிய ஆலோசனை வருமாறு:-

புதுவையில் விஸ்வகர்மா தொழில்களை அடையாளம் கண்டு அதன் தொழிலா ளர்கள் குறித்த முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விஷ்வகர்மா தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை விரைவில் நடத்த வேண்டும். விஷ்வகர்மா தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்வ தற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

விஸ்வகர்மா திட்டத்தைப் புதுவையில் விரைவாக செயல்படுத்த வேண்டும். விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விஸ்வகர்மா தொழில் மேளா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News