புதுச்சேரி
கோப்பு படம்.
விஷ குளவிகள் விரட்டி விரட்டி கொட்டியது 30 பேருக்கு சிகிச்சை-பரபரப்பு
- குளவி கொட்டியதால் காயம் அடைந்த பொது மக்கள் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர்.
- அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு பழைய ஏரியில் 100 நாள் திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த விஷக் குளவிகள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை துரத்தி துரத்தி கொட்டியது.
இதில் பலரும் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து குளவி கொட்டியதால் காயம் அடைந்த பொது மக்கள் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர்.
அங்கு 30-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பி னர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை இன்று ஏற்பட்டது.