பொம்மை செய்ய மாணவர்கள் பயிற்சி பெறும் காட்சி.
மாணவர்களுக்கு பொம்மை தயாரிப்பு பயிற்சி
- அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிறப்பு முகாமை நடத்துகிறது.
- பொம்மைகளை வீட்டில் அலங்கார பொருட்களாகவும் பரிசு பொருட்களாகவும் வழங்க இருப்பதாக மாணவியர் கூறினர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 20-ந்தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களை பயனுள்ளதாக்கி கொள்ள புதுவை அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிறப்பு முகாமை நடத்துகிறது.
இந்திரா நகரில் உள்ள இந்திரா காந்தி அரசு மேனிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் பயனற்ற காகிதங்களை கலை நயமிக்க பொம்மைகளாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அய்யனார், பழங்கால மக்களின் அலங்காரம், போர் வீரர்கள்,தேசத் தலைவர்கள், சாமிகள் என பல விதமான பொம்மை செய்ய மாணவர்களுக்கு நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் பயிற்சி அளித்தார். ஆண்டுதோறும் கோடை காலத்தில் சிறப்பு முகாம்களை நடத்தி 7 ஆயிரம் மாணவர்களுக்கு இவர் பயிற்சி அளித்து ள்ளார்.
ஒரே நாளில் பெற்ற பயிற்சியில் விதவிதமான பொம்மைகளை உருவாக்க பயிற்சி பெற்றதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த பொம்மைகளை வீட்டில் அலங்கார பொருட்களாகவும் பரிசு பொருட்களாகவும் வழங்க இருப்பதாக மாணவியர் கூறினர்.