புதுச்சேரி
கோப்பு படம்
ரூ.150 கோடி பணிகளுக்கு சுற்றுலா திட்ட அறிக்கை
- ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் திட்ட ஆலோசகராக தேர்வாகியுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் "சுதேஷ் தர்ஷன் 2.0" திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான மூலத்திட்டம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் திட்ட ஆலோசகராக தேர்வாகியுள்ளது.
இந்த நிறுவனம், சுற்றுலாத்துறை இடையே யான திட்ட ஆலோசனை ஒப்பந்த நிகழ்ச்சி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை இயக்குநர் பிரியர்தர்ஷினி மற்றும் தனியார் நிறுவன துறைத்தலைவர் ரத்தீஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.