கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- ஆணையர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் 2023-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ விழாவில் திருக்காமீஸ்வரர் ரிஷப வாகனம், மயில்வாகனம், இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகன சேவை களில் எழுந்தருளினார்.
தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ, ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 4 மாடவீதி வழியாக தேர் பவனி சென்றது. பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேரோட்டத்திற்கான ஏற்பாட்டை இந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகள், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.