புதுச்சேரி

போராட்ட அழைப்பை திருமாவளவனிடம் புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழங்கினர்.

ஜிப்மருக்கு எதிரான போராட்டத்துக்கு திருமாவளவனுக்கு அழைப்பு

Published On 2023-04-27 13:45 IST   |   Update On 2023-04-27 13:45:00 IST
  • ஜிப்மர் இயக்குனர் அனுமதியுடன் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன், புதுவை சதாசிவம், ஊசுடு தொகுதி பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியை கட்டணமயப்படுத்த மத்திய பா.ஜனதா அரசு முடிவெடுத்துள்ளது. 63 வகையான பரிசோதனைகளுக்கு குறைந்தது ரூ.500 ரூபாய் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க ஜிப்மர் இயக்குனர் அனுமதியுடன் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

கட்டண அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மே 5-ந் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

போராட்ட அழைப்பிதழை கட்சியின் தேசிய தலைவர் தொல்.திருமாவளவனிடம் சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் புதுவை முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வழங்கினார். இந்த சந்திப்பின்போது கட்சியின் புதுவை மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் அரிமா தமிழன், முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் தமிழ்வாணன், வெளியீட்டு மைய மாநில செயலாளர் பொன்னி வளவன், வானூர் தொகுதி செயலாளர் பால்வண்ணன், வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன், புதுவை சதாசிவம், ஊசுடு தொகுதி பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News