புதுச்சேரி
அரசு பள்ளியில் மதில்சுவர் அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
அரசு பள்ளியில் மதில்சுவர் அமைக்கும் பணி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
திருபுவனைத் தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தை சுற்றி புதிதாக மதில் சுவர் கட்டுவதற்காக பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கெஜலட்சுமி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் கருணாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் வச்சலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.