புதுச்சேரி

மின் தகன மையம் அமைக்கும் பணியை  கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

நவீன மின் தகன மையம் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2023-07-25 05:18 GMT   |   Update On 2023-07-25 05:18 GMT
  • ரூ.3 கோடியே 14 லட்சம் செலவில் நகராட்சி மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
  • பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையில் உள்ள சுடுகாட்டில் நவீன மின் தகனம் மையம் அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 14 லட்சம் செலவில் நகராட்சி மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

தற்போது சுடு காட்டிற்கு மதில்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நேரில் ஆய்வு செய்தார்.அப்போது நகராட்சி இளநிலை பொறியாளர்கள் சண்முகம், பரமன் ஆகியோரிடம் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன். தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி கிளை செயலாளர் ராகேஷ். தி.மு.க. பிரமுகர்கள் நோயல், பாலாஜி, மரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News