புதுச்சேரி

கொமந்தான் மேடு தரைபால தடுப்பணை நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.

தென்பெண்ணையாறு படுகை அணை நிரம்பி வழிகிறது

Published On 2023-05-04 14:00 IST   |   Update On 2023-05-04 14:00:00 IST
  • விளைநிலங்கள் வீடுகள் தெருக்கள் சாலைகள் என பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
  • நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவு 8:30 மணி முதல் தொடர் மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள விளைநிலங்கள் வீடுகள் தெருக்கள் சாலைகள் என பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சித்தேரி அணைக்கட்டுப் பகுதிகளில் உள்ள விலை நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது.இதனால் பயிர்கள்அழுகும் நிலைக்கு சென்றது.இதையடுத்து தண்ணீரை வாய்க்கால் வழியாக கொண்டு வந்து சித்தேரிஅணைக்கட்டை திறந்து வெளியேற்றி வருகின்றனர்.

ஒரே நாளில் 16.5 செ.மீ மழை கொட்டியுள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தண்ணீர் வரத்து அதிக ரிப்பால் தென்ெபண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி, கொமந்தான்மேடு படுகை அணை நிரம்பி வழிகிறது.

Tags:    

Similar News