புதுச்சேரி

தியாகி சீனுவாசன் சிலையை முதல் அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்த காட்சி. அருகில் அமைச்சர் நமச்சிவாயம். , கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ, ஆகியோர் உள்ளனர்.

null

மாணவர்களுக்கு அறிவித்த திட்டங்கள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்

Published On 2023-07-06 10:46 IST   |   Update On 2023-07-06 12:33:00 IST
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
  • நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களின் தியாகத்தைப் பற்றி இளந்தலைமுறையினர் அறிவது அவசியம்.

புதுச்சேரி:

புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் சீனிவாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேயர் ராமலிங்கக் கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், தியாகிகள் உருவச் சிலை திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிய கட்டிடத்தையும், சிலைகளையும் திறந்து வைத்து பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களின் தியாகத்தைப் பற்றி இளந்தலைமுறையினர் அறிவது அவசியம். ஆகவே தலைவர்களது தியாகத்தை இளந்தலைமுறையினருக்கு கற்பிக்கவேண்டும்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளது சிலைகளை பள்ளிக்கூடங்கள் போன்ற வற்றில் அமைப்பதும், அச்சிலைகளது அடியில் அவர்களது கருத்துள்ள வாசகங்களை பொறிப்பதும் அவர்களது தியாகத்தை நினைவுகூறுவதாக அமைகிறது. அவர்களது பெயர்களையும் நாம் முக்கிய இடங்களுக்கு சூட்டுவதும் தியாகத்தை இளந்தலைமுறையினர் நினைவு கூர்வதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிறைவேற்றும்

அறிவித்த எல்லா திட்டங்களையும் அரசு நிறைவேற்றும். பொது மக்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம். குறிப்பாக மாணவர்க ளுக்கு அறிவித்த திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப் படும். இந்தியா சார்பில் சர்வதேச போட்டியில் பங்கேற்று புதுவை வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு விரைவில் உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். உடல் ஆரோக்கியத்துக்கு பிள்ளைகள் விளை யாட்டி லும் ஆர்வம் காட்ட வேண்டும்.

புதுவையில் எளிதாக கிடைக்கும் கல்வியை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மத்திய அரசின் உதவியோடு புது வையை சிறந்த முறையில் முன்னேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசும் போது சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் எந்தெந்த பள்ளிகளில் சூட்டப்பட்டுள்ளதோ அங்கு அவர்களின் சிலைகள் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சம்பந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக விடுதலை வீரர் சீனுவாசன் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாண சுந்தரம் வரவேற்றார். முடிவில் ராமலிங்க கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.

Tags:    

Similar News