புதுச்சேரி
கோப்பு படம்.
வியாபாரியை இரும்பு ராடால் தாக்கியவர் கைது
- பச்சையப்பன் வீட்டிற்கே சென்று, அவரை இரும்பு ராடால் தாக்கினார்.
- புகாரின் பேரில் மடுகரை போலீசார் அசோக் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் பச்சையப்பன் (வயது38). இவர் வீட்டிலே பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இவர் குடும்பத்துடன், வெளியே சென்று இரவு வீட்டிற்கு திரும்பிய போது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்ப நாயுடு மகன் அசோக்குமார் அவர்களை வழிமறித்து தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
பச்சை யப்பன் வீட்டிற்கே சென்று, அவரை இரும்பு ராடால் தாக்கினார்.இதில் அவருக்கு தலையில்பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அசோக்குமார் அங்கிருந்நு தப்பி சென்று விட்டார். பின்னர் அருகில் இருந்த வர்கள் பச்சையப்பனை மீட்டு மதகடிப்பட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில் மடுகரை போலீசார் அசோக் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.