- போலீசார் பள்ளத்தில் இருந்த வேனை தனியார் கிரேன் மூலம் மீட்டனர்.
- போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
செல்லிப்பட்டு பகுதியில் இருந்து இன்று காலை பத்துக்கண்ணு நோக்கி குப்பை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது.
அம்மணக்குப்பம் பகுதியில் இடது புறம் ஒதுங்கும்போது சாலையின் ஓரத்தில் இருந்த மண் சறுக்கி பள்ளத்துக்குள் வேன் பாய்ந்தது. இதில் குப்பை வேன் பல்டி அடித்து தலை குப்புற கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வேனுக்குள் காயத்துடன் சிக்கித் தவித்த டிரைவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்
தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வில்லியனூர் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் பள்ளத்தில் இருந்த வேனை தனியார் கிரேன் மூலம் மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் குப்பைவேனை ஒட்டி வந்தவர் வாதானூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன்(31) என்பதும், வேகமாக குப்பை வேனை ஓட்டி வந்ததால் விபத்துக்கு காரணமாக இருந்ததும் தெரிய வந்தது. இந்த விபத்துக்கு குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.