புதுச்சேரி

பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற மாணவி நிவேதாவை தமிழ்நாடு மீனவர் பேரவையின் புதுவை மாநில நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவிக்கு மீனவர் பேரவை பாராட்டு

Published On 2023-05-27 14:50 IST   |   Update On 2023-05-27 14:50:00 IST
  • உயிரியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
  • மாவட்ட நிர்வாகிகள் ஜலமணி, ராஜா, விமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

பிளஸ்-1 பொதுத்தேர்வில் புதுவை பனித்திட்டு மீனவ கிராமத்தை சேர்ந்த மாணவி நிவேதா 600-க்கு 574 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் உயிரியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து புதுவை மாநிலத்துக்கு பெருமை சேர்த்த மாணவி நிவேதாவை தமிழ்நாடு மீனவர் பேரவையின் அரியாங்குப்பம் (தெற்கு) மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் வரும் காலங்களில் உயர்படிப்புக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் உறுதி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் புகழேந்தி, பொதுச்செயலாளர் குணசீலன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜலமணி, ராஜா, விமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News