எஸ்.எஸ். எல்.சி.பொதுத்தேர்வில் சாதனை படைத்த தவளக்குப்பம் நேஷனல் பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாக இயக்குனர் கிரண்குமார், தாளாளர் எழிலரசி கிரண்குமார் ஆகியோர் பாராட்டிய காட்சி.
தவளக்குப்பம் நேஷனல் பள்ளி அபார சாதனை
- மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிரண்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.
- முதலிடமும் மாணவர் பிரகதிஷ் 479 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும் மாணவி நித்தியா 478 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தவளக்குப்பம்,நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனை புரிந்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதவெற்றியை அளித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி தாரகப்பிரியா 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் மாணவர் பிரகதிஷ் 479 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும் மாணவி நித்தியா 478 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.
மேலும் 400 மதிப்பெண்க ளுக்கு மேல் 36 மாணவர்கள் பெற்று கிராமப்புற அளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளனர். தமிழ் பாடத்தில் 28 மாணவர்கள் ஆங்கிலத்தில் 37 மாணவர்கள் கணிதத்தில் 16 மாணவர்கள் அறிவியலில் 18 மாணவர்கள் சமூக அறிவியலில் 24 மாணவர்கள் 90 சதவீதம் மேல் மதிப்பெண்கள் பெற்று பாடவாரியாக முத்திரை பதித்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிரண்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.
பள்ளியின் தாளாளர் எழிலரசி கிரண்குமார் சாதனை புரிந்த மாணவர்களுக்கு, இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கிராமப்புற அளவில் இம்மாபெரும் சாதனை புரிய அயராது உழைத்த மாணவச் செல்வங்களையும் பள்ளியின் ஆசிரிய- ஆசிரியைகளையும் தலைமை ஆசிரியை உமா வாழ்த்தி பாராட்டினார்.