புதுச்சேரி

கோப்பு படம்.

குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்கள் கைது

Published On 2023-06-16 13:19 IST   |   Update On 2023-06-16 13:19:00 IST
  • மது போதையில் ரகளை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
  • 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை மடுவுபேட் சந்திப்பில் உள்ள மதுக்கடையில் 2 பேர் குடித்து விட்டு மது போதையில் ரகளை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளை செய்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த எழில்(வயது38) மற்றும் கோட்டக்குப்பம் அபிஷேக் நகரை சேர்ந்த சாந்தநாதன்(26) என்பது தெரியவந்தது. இதைத்தொடந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News