புதுச்சேரி

கையில் வாளுடன் புதுவை பெண் அமைச்சர்

Published On 2023-05-02 12:21 IST   |   Update On 2023-05-02 12:21:00 IST
  • புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா.
  • அமைச்சர் அறையில் தனது இருக்கையில் அமர்ந்த படி உறையில் இருந்து வாளை எடுத்து கையில் வைத்து பார்ப்பது போன்ற வீடியோ.

புதுச்சேரி:

புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா.

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வானவர் சந்திரபிரியங்கா. போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள சந்திரபிரியங்கா அம்மன் வேடம் தரித்த வீடியோ, சிறுவர்களோடு விளையாடுவதுபோன்ற வீடியோ, டான்ஸ் ஆடிய வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் உள்ள தனது அமைச்சர் அறையில் தனது இருக்கையில் அமர்ந்த படி உறையில் இருந்து வாளை எடுத்து கையில் வைத்து பார்ப்பது போன்ற வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. இது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அமைச்சர் சந்திர பிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த புகைப்படம் 1½ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ. ஒரு நண்பர் வாளை என்னிடம் கொடுத்து பார்க்கும்படி கூறினார்.

அதை பார்த்தபோது வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியுள்ளது என்றார்.

Similar News