புதுச்சேரி
மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.
கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நிறைவு விழா
- மாணவ மாணவிகளுக்கு ஆனந்தபாலயோகி பவனானி, தேவசேனா பவனானி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
- யோகாச்சாரியா ஆனந்த பாலயோகி பவனானி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை யோகாஞ்சலி நாட்டியாலயத்தின் தலைவர் யோகாச்சாரியா ஆனந்த பாலயோகி பவனானி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் யோகா செயல்முறை விளக்கம், பரத நாட்டியம் மற்றும் ஸ்லோகம் வாசித்தல் நடைபெற்றது. கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஆனந்தபாலயோகி பவனானி, தேவசேனா பவனானி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் திவ்ய பிரியா பவனானி, லலிதா, சண்முகம், ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொது மேலாளர் சண்முகம் நன்றி கூறினார்.