புதுச்சேரி

கோப்பு படம்.

ரவுடி, கொலை குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய திடீர் தடை

Published On 2023-05-20 13:06 IST   |   Update On 2023-05-20 13:06:00 IST
  • அரியாங்குப்பத்திலும் தவளக் குப்பத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளது.
  • 6 பேருக்கு குண்டாஸ் வழக்குகள் போட போலீசார் ஏற்பாடுகள் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியை ஒட்டிய அரியாங்குப்பம் பகுதி வளர்ந்து வரும் நகரமாக இருந்து வருகிறது.

இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நகர் மற்றும் கிராமங்கள் இருந்து வருகிறது புதுச்சேரியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதால் பல கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது.

 வளர்ந்து வரும் நகரமாக மாறி வரும் அரியாங் குப்பத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவம், மோசடிகளும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. கடந்த 4 மாதத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் அரியாங்குப்பத்திலும் தவளக் குப்பத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிறுய வயதிலேயே கஞ்சா, போதை பழக்கத்திற்கு அடிமையாகி பல குற்றச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க சமூக ஆர்வலர்களும் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம் பகுதியில் ரவுடி மற்றும் குற்றச்செயலில் 67 பேரும் தவளக்குப்பத்தில் 29 பேரும் இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச் செல்வன் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திருட்டு, வழிபறி, பொதுமக்களுக்கு இடையூறு வகிக்கும் குற்றவாளிகளுக்கு சொத்து பத்திரம், மற்றும் ரொக்கப் பணம் செலுத்தி நன்னடத்தை இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலை வழக்கு, ரவுடிகளை ஊருக்குள் நுழைய தடை மற்றும் 6 பேருக்கு குண்டாஸ் வழக்குகள் போட போலீசார் ஏற்பாடுகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் பரிந்து ரையின் பேரில் பல்வேறு வழிக்குகளில் சம்பந்தப்பட்ட அரியாங்குப்பம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி குணா என்கிற குணசீலன் (28), அரியாங்குப்பம் மாஞ்சாலை, அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (28), சுப்பையா நகர் பகத்சிங் வீதியை சேர்ந்த கதிர் என்கிற கதிர்வேல் (29) என்பவர்கள் மீது வடக்கு மாவட்ட துணை கலெக்டர் உத்தரவின் பேரில் 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து உள்ளார்.

Tags:    

Similar News