புதுச்சேரி

கோப்பு படம்.

மாணவர்கள் பஸ்களை இயக்கி சீருடை வழங்க வேண்டும்-தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-11-12 09:25 IST   |   Update On 2022-11-12 09:25:00 IST
  • புதுவை அரசின் கல்வித்துறையின் மூலமே மதிய உணவை மீண்டும் தயாரித்து முட்டையுடன் வழங்க வேண்டும்.
  • எனவே இந்த முறை எந்தவித காரணமும் கூறாமல் குழந்தைகள் தினமான வரும் 14-ந் தேதி முதல் மாணவர் பஸ்களை இயக்க உறுதியான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் கல்வித்துறையின் மூலமே மதிய உணவை மீண்டும் தயாரித்து முட்டையுடன் வழங்க வேண்டும். அல்லது அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிர்வாகத்தினரை புதுவையைச் சேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு உணவு தயாரிக்கச் செய்து மாணவர்களுக்கு முட்டையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் பள்ளி தொடங்கி 6 மாத காலம் ஆகியும் இன்றுவரை மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படாததால் நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் கிராமப்புற மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் தினமும் ரூ.100 செலவு செய்து வருகின்றனர்.இது தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் அவர்களது கல்வித்திறனை பாதிக்கும்.

எனவே இந்த முறை எந்தவித காரணமும் கூறாமல் குழந்தைகள் தினமான வரும் 14-ந் தேதி முதல் மாணவர் பஸ்களை இயக்க உறுதியான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க வேண்டும்.அதேபோல் பள்ளி சீருடையையும் மாணவர் தினத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்ப தற்கான நடவ டிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News