புதுச்சேரி
மாநில அளவிலான சாம்பியன்ஷிப் நெட்பால் போட்டியை அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தொடங்கி வைத்த காட்சி.
மாநில அளவிலான சாம்பியன்ஷிப் நெட்பால் போட்டி
- அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார்
- புதுவை அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அமெச்சூர் நெட்பால் விளையாட்டுக்கழகம் சார்பில் 5-வது சிறுவர், சிறுமிகளுக்கான மாநிலஅளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் திலாசுப்பேட்டை வீமன் நகர் மந்தைவெளி திடலில் 2 நாட்கள் நடக்கிறது.
இதில் புதுவை பிராந்தியத்தில் உள்ள 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் தொடக்கவிழாவுக்கு நெட்பால் சங்க செயலாளர் அனிதா வரவேற்றார். புதுவை அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
முனுசாமி, நாகரத்தினம், நெட்பால் சங்க துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், உழவர்கரை நகராட்சி பொறியாளர்கள் மலைவாசன், முத்தையன், பாலையா, கதிரேசன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.