புதுச்சேரி

டெல்லியில் நடைபெற்ற ஜி.20 உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்ட காட்சி.

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் திடீர் டெல்லி பயணம்

Published On 2023-10-13 14:11 IST   |   Update On 2023-10-13 14:11:00 IST
  • பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் கண்டிக்கத்த க்கது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் கருத்து கூறியிருந்தார்.

புதுச்சேரி:

அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்த விவகாரம் புதுவை அரசியலில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சாதிரீதியாகவும், பாலினரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதை உணர்ந்ததால் ராஜினாமா செய்வதாக சந்திர பிரியங்கா கூறியிருந்தார்.

இதற்கிடையே போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் கண்டிக்கத்த க்கது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜி.20 உறுப்பு நாடுகளின் பாராளு மன்ற சபாநாயகர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பின் பேரில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார்.

இந்த மாநாடு முடிந்ததும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சந்திர பிரியங்கா விவகாரம் குறித்து பேசுவார் என தெரிகிறது.

Tags:    

Similar News