புதுச்சேரி
மரக்கன்று நடும் விழா நடைபெற்ற காட்சி.
- கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரியில் நடைபெற்றது.
- செவிலியர் மாணவர்கள் இயற்கை அன்னை புவியை காப்போம் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர்.
புதுச்சேரி:
ஸ்ரீ பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழக கழகத்தின் கீழ் இயங்கும் கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
கல்லூரி துணை முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் புனித ஜோஸ்பின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக புவி தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
தொடர்ந்து செவிலியர் மாணவர்கள் இயற்கை அன்னை புவியை காப்போம் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.