புதுச்சேரி
அ.தி.மு.க மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் மரக்கன்று வழங்கிய காட்சி.
பொதுமக்களுக்கு மரக்கன்று- அன்னதானம்-வையாபுரி மணிகண்டன் வழங்கினார்
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- ரங்கநாதன், கலியமூர்த்தி, மங்களம், ஜெயபால், வில்லியனூர் ஜெயபால், இலியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
தமிழ்நாடு எதிர்க்கட்சி த்தலைவர், முன்னாள் முதல அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை யொட்டி மரக்கன்றுகள் நடும்விழா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில்லியனூர் சுல்தான்பேட்டையில் நடந்தது. புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் மரக்கன்று நட்டு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், கழக முன்னோடி வில்லியனூர் மணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் காதர்மொய்தீன் மற்றும் நிர்வாகிகள் குப்புசாமி, ரங்கநாதன், கலியமூர்த்தி, மங்களம், ஜெயபால், வில்லியனூர் ஜெயபால், இலியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.