புதுச்சேரி

தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் அமர்ந்து விழிப்புணர்வு 

தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் அமர்ந்து விழிப்புணர்வு

Published On 2023-09-20 05:06 GMT   |   Update On 2023-09-20 05:06 GMT
  • சுற்றுலா பயணிகள் வீசி சென்ற 1.5 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.
  • தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுச்சேரி:

கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரையில் தூய்மை பாரத நகர்ப்புற இயக்கம் 2.0 தூய்மைப்பணி நடந்தது.

கோட்டக்குப்பம் நகராட்சி சுகாதார பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஆணையர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.

கடற்கரையில் நடந்த தூய்மை பணி நிகழ்ச்சியில் தூய்மையே சேவை அடையாள சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தூய்மை உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த துப்புரவு பணியில் சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பரப்பில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற 1.5 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.

மேலும் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அல்ல கூடாது என்பதை வலியுறுத்தியும் இதற்காக உதவி செய்ய தமிழக அரசு வழங்கியுள்ள இலவச தொலைபேசி எண்ணான 14420 கடற்கரையில் மனித சங்கிலி போல் அமர்ந்து தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News